Isaithenral.Com

நான் யாரையும் காதலிக்கவில்லை: விஷால்

E-mail Print PDF
User Rating: / 30
PoorBest 

விஷால் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அவரே ஒரு நடிகையை விரும்புவதாகவும் அறிவித்தார். பிறகு அச்செய்தி அடங்கி போனது. தற்போது மீண்டும் அவர் காதலில் விழுந்துள்ளதாக


பேச்சுக்கள் உலவுகின்றன. இதுகுறித்து விஷாலிடம் கேட்டபோது மறுத்தார். கடந்த காலத்தில் எனக்கு காதல் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. யாரையும் காதலிக்காமல் தனியாகத்தான் இருக்கிறேன் என்றார். 

மேலும் அவர் கூறியதாவது:-

நான் ஆரம்ப காலத்தில் நடித்த பல படங்கள் ஹிட்டாயின. அந்த வெற்றியை நான் தக்க வைத்துக் கொள்ள தவறிவிட்டதாக நண்பர்கள் கூறினர். என்னை பொறுத்தவரை நான் நடித்த எல்லா படங்களுமே நல்ல படங்கள்தான். ரிலீஸ் செய்த நேரம் சரியில்லாமல் இருந்து இருக்கலாம். விளம்பர படுத்துவதிலும் குறை ஏற்பட்டு இருக்கலாம். மற்றபடி ஒவ்வொரு படமும் எனக்கு பிடித்த படங்கள். தோல்வி படத்தில் நடித்து விட்டோமா என்று  எப்போதும் வருந்தியதி இல்லை எல்லா படங்களிலும் முழுமையாக பணி செய்கிறேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு நடிகனின் தலை எழுத்து மாறுகிறது. பட்டத்து யானை படம் சிறப்பாக வந்துள்ளது. இதில் என் ஜோடியாக நடித்த அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திறமையான நடிகை புத்திசாலித்தனமானவர். பெரிய நடிகரின் மகள் என்ற எண்ணம் கொஞ்சமும் அவரிடம் இல்லை. அர்ப்பணிப்பு உணர்வோடு முழு  ஈடுபாட்டுடன் நடித்தார்.

இவ்வாறு விஷால் கூறினார்

நான் இன்னொரு முறை காதலிக்கவே மாட்டேன்: நயன்தாரா

E-mail Print PDF
User Rating: / 16
PoorBest 

நயன்தாரா இரண்டு முறை காதலில் தோல்வி அடைந்தார். முதலில் சிம்புவை விரும்பினார். அது முறிந்தது. பிறகு பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலுக்காக மதம் மாறினார். பிரபு தேவாவும் முதல்

மனைவியை விவாகரத்து செய்ததால் இருவரும் திருமணம் வரை வந்து பிறகு பிரிந்து விட்டனர்.

இதற்கான காரணத்தை இதுவரை இருவரும் அறிவிக்கவில்லை. தற்போது நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். ஐதராபாத்தில் நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு:-

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளேன். சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி விட்டு மீண்டும் வந்தால் அவர்களுக்கு வரவேற்பு இருக்காது. ஆனால் எனக்கு அப்படி இல்லை. ஆரம்பத்தில் எப்படி மரியாதை இருந்ததோ அது இப்போதும் கிடைத்துள்ளது. எந்த பின்னடைவும் இல்லை. முன்பை விட பிசியாக இருக்கிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கில் அனாமிகா படத்தில் நடிக்கிறேன். தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. நல்ல கேரக்டர்களில் நடிக்கிறேன். தனியாக இருப்பது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. இன்னொரு முறை என் வாழ்க்கையில் நான் காதலில் விழ வாய்ப்பே இல்லை. என் வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்ள வேண்டும் என்பதில் முழு சுதந்திரம் இருக்கிறது. அந்த சுதந்திரத்தை எப்போதும் இழக்க மாட்டேன்.

இவ்வாறு நயன்தாரா கூறினார்

மரியானில் எனது கதாபாத்திரம் மறக்கமுடியாதது: தனுஷ்

E-mail Print PDF
User Rating: / 20
PoorBest 

மரியான் படத்தில் எனது கதாபாத்திரம் மறக்கமுடியாதது என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, எனது சினிமா பயணத்தில் மரியான் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த படத்திற்காக நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன். ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் சவாலாக அமைந்தது.
இந்தி படங்களில் தொடர்ந்து நடிக்கவுள்ளேன். எனக்கு அனைத்தையும் தந்தது தமிழ் சினிமாதான். எனது முழு கவனமும் அதன் மீதுதான் இருக்கும், என்றார்

விஜயை பழிக்குப் பழி வாங்கும் வெங்கட்பிரபு

E-mail Print PDF
User Rating: / 30
PoorBest 

மங்காத்தா வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படம் பிரியாணி. இப்படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. இது அவருக்கு 100-வது படமாகும். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா

இது அவருக்கு 100-வது படமாகும். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

பிரியாணி படத்தை வரும் செப்டம்பர் 6ம் திகதி வெளியிட முடிவு செய்துள்ளனர். பிரியாணி படத்தின் புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றதை தொடர்ந்து பிரியாணி படமும் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியாணி படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, முதலில் படத்தின் ஹீரோவாக விஜயை நடிக்க வைக்க திட்டமிட்டுயிருந்தார். ஆனால், அவரது கால்ஷீட் கிடைக்கவில்லையாம். அவருக்கு அடுத்து, கார்த்திக்கு தான் ஹீரோ கதாபாத்திரம் சரியாக பொருந்தும் என முடிவெடுத்த வெங்கட் பிரபு, கார்த்தியை படத்தின் ஹீரோவாக்கினார். இதனால், விஜய்க்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு கார்த்திக்கு கிடைத்தது.

விஜய்யிடம் இருந்து கால்ஷீட் கிடைக்காத ஏமாற்றத்தில் இருக்கும் வெங்கட்பிரபு, விஜய் நடிக்கும் தலைவா ரிலீஸ் தினத்தன்றே தனது பிரியாணி படத்தையும் வெளியிட்டு போட்டி போட முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரியாணி படத்தின் வெற்றியை பார்த்து, இந்த மாதிரி அருமையான படத்தில் தன்னால் நடிக்க முடியவில்லை என விஜய் வருத்தப்படும் அளவிற்கு வெற்றி பெறவேண்டும் என்ற வெறியோடு உழைத்திருக்கிறாராம் வெங்கட்பிரபு

சூப்பர் ஸ்டார் கையால் அடிவாங்க ஆசைப்படும் அஜித்!

E-mail Print PDF
User Rating: / 117
PoorBest 

'மங்காத்தா'வின் வெற்றிக்கு பிறகும் அமைதியாக இருக்கிறார் அஜித். தனது அடுத்த படமான 'பில்லா 2' படத்தில் ஆர்ப்பாட்டமின்றி நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது 25-வது படமான 'அமர்க்கள(மு)ம்', இவரது 50-வது படமான 'மங்காத்தா'வும் வெற்றி பெற்ற மகிழ்ச்சி துளியும் பாதிக்காதது போல் இருக்கிறார். தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்பது போன்று சினிமா உலகில் ஒரு கருத்து நிலவி வருகிறது. இது குறித்து அஜித்திடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது, "தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை நான் பார்க்கிறேன். துரோணாச்சாரியாரின் அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக்கொள்வார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. நான் ஏகலைவன் போல இருக்கவே ஆசைப்படுகிறேன். சூப்பர் ஸ்டாரை நான் தூரத்தில் இருந்து ரசித்தபடியே, படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன். அவர் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் அடிவாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று எனது சினிமா பயணம் ஒரு முழுமையை அடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். 'மங்காத்தா'வின் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்", என்றார். வைரமேயானாலும் தங்கத்தோட சேர்ந்தாதான் அழகுனு புரியாதவரா..........?

Page 1 of 148