பைரவா அப்டேட்: பாடல் காட்சிக்காக சுவிட்சர்லாந்து சென்ற விஜய்

bairavaa-660x300அழகிய தமிழ் மகன்’ பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் முக்கிய வேடங்களில் சதீஷ், டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், ஜெகபதி பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், பாப்ரி கோஷ், அபர்ணா வினோத், ஹரிஷ் உத்தமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றிற்காக விஜய்-கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் சுவிட்சர்லாந்து சென்றுள்ளனர். அங்கு ஒரு வாரம் தங்கி இப்படத்தின் பாடல் காட்சியை படமாக்க உள்ளதாகவும், அநேகமாக விஜய்-கீர்த்தி சுரேஷ் இருவருக்குமான காதல் பாடலாக இப்பாடல் இருக்குமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ‘பைரவா’ படத்தை விஜயா புரடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.