ஆர்யாவுக்காக இணைந்த சூர்யா, கார்த்தி, விஷால்

201610311234230498_Suriya-karthi-vishal-joint-for-Arya_SECVPFஆர்யா தற்போது ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கத்தில் ‘கடம்பன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஆர்யா மலைவாழ் இளைஞனாக நடிக்கிறார். இதற்காக தனது உடல் எடையை அதிகரித்து நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடித்து வருகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீசரையும் படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிடவிருக்கிறார். அதற்கு முன்னதாக 5 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தியும், 5.30 மணிக்கு மற்றொரு போஸ்டரை விஷாலும் வெளியிடவிருக்கின்றனர்.

பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும், டீசரிலும் ஆர்யாவின் தோற்றம் எந்தமாதிரி இருக்கப்போகிறது என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.