சூர்யா படத்தின் டீசர் இன்று

maxresdefault-6-660x300ரஜினி, விஜய், அஜித் தவிர அடுத்த நிலையில் இருக்கும் அத்தனை நடிகர்களுக்கும் சிவ கார்த்திகேயன் வளர்ச்சியால் தொழில் நடுக்கம் ஏற்பட்டு இருப்பது கோலிவுட்டின் கிடுகிடுக்கும் உண்மை. தீபாவளிக்கு உடனடியாக ‘சிங்கம் -3’ படத்தை ரிலீஸ் செய்து தன் இருப்பை தமிழ்சினிமாவில் தக்கவைத்துக்கொள்ள நினைத்தார், சூர்யா. தன் தம்பி கார்த்தியின் ‘காஷ்மோரா’ ரிலீஸாவதால் ‘சிங்கம் -3’ வெளியீட்டை தள்ளிவைத்து விட்டார், சூர்யா. தமிழ்சினிமா நடிகர்களிலேயே ரஜினிக்கு அப்புறம் தெலுங்கு மார்க்கெட் உள்ள ஒரேநடிகர் சூர்யா மட்டும்தான் என்பது தனிக்கதை. .
ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிங்கம் -3’ திரைப்படம் ஹரிகோட்டா ராக்கெட் வேகத்தைவிட கடும் ஸ்பீடாக படம் நகர்கிறதாம். இதுவரை வெளிவந்த அத்தனை தமிழ் சினிமா டீஸர்களின் ரெக்கார்டை ‘சிங்கம் -3’ படத்தின் டீஸர் தகர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு சூர்யா – ஹரி டீம் சுல்லாப்பாக களத்தில் இறங்கி இருக்கிறது. தற்போது கிராபிக்ஸ் கில்லிகளோடு சேர்ந்து ‘சிங்கம்-3’ டீஸர் உருவாக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார், ஹரி.
‘சிங்கம்- 3’ படத்தின் டீஸர் 30 செகண்ட் மட்டுமே ஓடக்கூடிய அளவுகு உருவாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஃபிரேமிலும் சூர்யாவின் முகமே ஜொலிக்கிறது. உலகளாவிய புகழ்பெற்ற ஆஸ்கார் விருதின் ஷீல்டு சிலை மாதிரி காலில் இருந்து தலைவரை கடகடவென கிராபிக்ஸில் உருவாகி ஜொலிக்கும் சூர்யாவின் முகம். தமிழ்சினிமா ரசிகனை திகைக்க வைக்கப் போவது நிச்சயம் என்று இப்போதே ஆரூடம் சொல்கிறார்கள். சூர்யாவின் தந்தை சிவகுமாரின் பிறந்தநாளான இன்று அல்லது தீபாவளி பரிசாகவோ ‘சிங்கம்- 3’ டீஸரை வெளியிட திட்டமிட்டு வருகிறது சூர்யா – ஹரியின் டீம்.