மேடையில் மன்னிப்பு கேட்ட சூர்யா!

31-1477892457-surya-speech-600-600x300நடிகர் சூர்யா தனது தந்தையின் ஓவியக் கண்காட்சி நிறைவு நாள் மேடையில் நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

நடிகர் சிவக்குமாரின் பிறந்தநாளையொட்டி அவர் வரைந்த ஓவியக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியின் நிறைவு நாள் விழாவில் சிவக்குமாரின் மகன்களான சூர்யாவும், கார்த்தியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசினார்.

என் மகளின் திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்க சூர்யாவின் அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு யாருமே என்னை கண்டுகொள்ளவில்லை. அது வருத்தமாக இருந்தது என்று ரங்கநாதன் தெரிவித்தார்.

பயில்வான் ரங்கநாதன் கூறியதை கேட்ட சூர்யா மேடையில் வைத்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அண்ணா, நீங்கள் என் அலுவலகம் வந்த விஷயம் எனக்கு தெரியாது என்றார்.

என் அலுவலகத்திற்கு நீங்கள் வந்து அப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது. அப்படி ஒரு விஷயம் நடந்திருந்தால் அதற்காக நானும், என் அலுவலக ஊழியர்களும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று சூர்யா கூறினார்.

அப்பாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களில் அவர் உறவுகளுக்கு கொடுக்கும் மதிப்பும் ஒன்று. அவரை போன்றே உறவுகளுக்கு மதிப்பு கொடுக்க விரும்புகிறோம் என்றார் சூர்யா.