தீபாவளி ரேஸில் வென்றது யார்? கொடியா, காஷ்மாராவா? முழு விவரம்!

kodi-kashmoora-31-10-16-660x300துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் கொடி. த்ரிஷா முதல்முறையாக இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார். மேலும் ‘பிரேமம்’ புகழ் அனுபமாவும் இப்படத்தில் ஒரு நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெள்ளியன்று வெளியானது. இதில் உலகம் முழுவதும் சேர்த்து முதல் மூன்று நாட்களில் இப்படம் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாம். அதேசமயம் கார்த்தி, நயன்தாரா நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் வெளியான காஷ்மோரா படம் முதல் மூன்று நாட்களில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளையும் சேர்த்து ரூ. 40 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். கார்த்தியின் மார்கெட்டை வைத்து தெலுங்கிலும் காஷ்மோரா நல்ல வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.