மாற்றுத் திறனாளிகளுடன் தீபாவளி கொண்டாடிய அஜித் ரசிகர்கள்

201610311418260440_Ajith-fans-celebrate-diwali-to-physically-challenged-persons_SECVPFநேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி திருநாளை வெகுவிமரிசையாக கொண்டாடினர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், புதிய துணிமணிகள் அணிந்தும் நிறைய பேர் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், அஜித் ரசிகர்கள் மதுரையில் மாற்றுத்திறனாளிகளுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். சிவகாசி, கும்பகோணம், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து மதுரையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தில் தீபாவளி திருநாளை கொண்டாடியுள்ளனர்.

இந்த காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டாசுகள், இனிப்புகள், மதிய உணவுகள் கொடுத்துள்ளனர். மேலும், அவர்களுடன் ஆடி, பாடி அவர்களை குஷிபடுத்தவும் செய்துள்ளனர். அஜித் ரசிகர்களின் இந்த உதவி பலரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

அஜித் தனது ரசிகர்கள் மன்றத்தை ஏற்கெனவே கலைத்துவிட்டார். இருப்பினும், அஜித் பெயரில் இன்னமும் அவரது ரசிகர்கள் பற்பல உதவிகள் செய்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.